உடல் பருமனாக இருப்பது நாய்களை ஆக்ரோஷப்படுத்துகின்றனவா? பிரிட்டனில் மேற்கொண்ட ஆய்வுகளின்படி (இங்கே இது போன்ற ஆய்வுகள் குறைவு தானே) பிரிட்டனில் மட்டும் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களின் எண்ணிக்கை 55 லட்சம். இத்தனை நாய்களில் பெரும்பாலான நாய்களுக்கு தனது எஜமானர்கள் துரித உணவைக்கொடுக்கிறார்களாம். இதனால் அவைகள் தெரு நாய்களை விட பருமனாக உள்ளது! அதன் காரணமாக அவை ஆக்ரோசமாக செயல்படுகிறது என்கிறார்கள். இதன் விளைவாக குறைந்த்து ஐந்து லட்சம் மனிதர்கள் இம்மாதிரியான நாய்களால் தாக்கப்படுகிறார்களாம்! அதே போல பிற வளர்ப்புப்பிராணிகளும் தாக்குதலுக்குள்ளாகின்றனவாம். போஷாக்கற்ற உணவு, எப்போதுமே கட்டப்பட்டிருப்பதால் உடற்பயிற்சிக்கு வாய்ப்பில்லாமல் போவது, தனித்தே இருப்பதால் சமூக வாழ்க்கைக்கு பழக்கமில்லாத்து இவையே வளர்ப்பு நாய்கள் ஆக்ரோஷமாய் இருப்பதன் காரணம்! வாரம் ஒன்றிற்கு குறைந்த்து 2,50,000 பேர் இவைகளால் கடிபடுகிறார்களாம். இது தவிர 30,000 பேர் தன்னால் வளர்க்கப்படும் நாய்களால் கடிபடுகிறார்களாம். வினையைப்பார்த்தீங்களா? நாய்களின் மூலம் பரவும் ராபீஸ் வைரசுகளின் தாக்கத்திற்கான அறிகுறிகள் தெரிந்தபின் காப்பாற்ற இயலாது. 100% மரணம் நிச்சயம். கொரானா வைரசுகள் எல்லாம் இதன் முன் நிற்கமுடியாது. சில வருடங்களுக்கு முன்னர் தான் வளர்த்த பிட் புல் வகை நாயினால் தல துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட எஜமானரை பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் தானே!

Comments