யானை எந்த விலங்கைக்கண்டு பயப்படும்? கேலிச்சித்திரங்களில் குறிப்பிடுவது போலவோ அல்லது கார்ட்டூன் தொடர்களில் குறிப்பிடுவது போலவோ யானைகள் எலிகளுக்குப்பயப்படுவதில்லை. மாறாக தேனீக்களுக்குப்பயப்படும். காரணம் தேனீக்கள் யானைகளின் கண்களுக்கு அருகே கொட்டிவிடும், சமயங்களில் தும்பிக்கைக்குள்ளும் கொட்டிவிடும். இதனால் யானைகளுக்கு தேனீக்களின் மீது பயம். ஆப்ரிக்க விவசாய நிலங்களில் பயிர்களை யானைகளிடமிருந்து காக்க தேன் கூடுகளை அமைத்திருப்பார்கள். அதுமட்டுமல்ல தேனீக்கள் குறித்து விசேஷ ஒலியின் மூலம் குறைந்தது பத்து யானைக்கூட்டங்களுக்கு பாதிக்கப்பட்ட யானைகள் செய்தியைப்பரப்பி எச்சரிக்கை செய்யும். அந்த ஒலிக்கு bee rumble என்று பெயர். இது பிரத்யேகமான ஒலி! எறும்புகளுக்கு பயப்படும் என்றாலும் தேனீக்கள் அளவிற்கு பயப்படுவதில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.. அதனாலயே எறும்புகள் இருக்கும் தாவரங்களை தவிர்த்துவிடுமாம்.

Comments