மனிதனை டெஸ்மான்ட் மோரிஸ் Naked ape (நிர்வாணக்குரங்கு) என்று குறிப்பிடுவார். பரிணாமத்தில் முடி உதிர்ந்ததன் காரணம் அடர்ந்த வனத்திலிருந்து சவானா (பரந்த புல்வெளியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மரங்கள் இருந்தால் அது சவானா காடுகள் எனப்பொருள் கொள்க) காடுகளுக்கு புலம் பெயர்ந்தது என்ற தியெரி ஒன்று உண்டு. முடி உதிர்ந்ததின் காரணமாக பகலில் வேட்டையாடும் போது உடல் அதிக வெப்பமடைவது தவிர்க்கப்படுகிறது. முடிகள் அதிகமாக இருக்கும் போது வெப்பம் நீடித்து இருக்கும். அதனால் காலப்போக்கில் உடம்பு முழுக்க ரோம்ம் தேவையற்ற ஒன்றாகிப்போனது. குரங்குகள் வேட்டையாடி பார்த்திருக்கிறீர்களா என்ன? ஏன் ஆண்களுக்கு விரை விதை தொங்கியிருக்கிறது, பிடரி மயிர், அக்குள் முடி, இனப்பெருக்க உறுப்பிற்கான முடி என்று உடல் வெப்பம் குறித்த பரிணாமம் எங்கெங்கோ கொண்டு செல்லும் என்பதால் தலைப்பிற்கு வந்துவிடுகினேன். குரங்குகளுக்கு funny bone இருக்குமா? என்ற சந்தேகம் வலுத்தது. மனித பரிணாமத்தில் கட்டைவிரல் மற்ற விரல்களுக்கு எதிராக அமைந்த பண்பு பற்றுதலுக்கு முக்கியமான அவயமாக கருதப்படுகிறது. இந்த மாற்றங்கள் தான் ulnar நரம்புகளை மாற்றியிருக்கக்கூடும் என்கிறார்கள். உண்மையில் funny bone என்பது எலும்பில் அடிபட்டதால் ஏற்படும் உணர்வு அல்ல. அல்நார் நரம்பு நசுக்கப்படுவதன் காரணமே என்கிறது அறிவியல். நரம்பியல் குறித்தும் அதிகமாய்த்தெரிந்துகொள்ளவேண்டும்.

Comments