Posts

மனிதனை டெஸ்மான்ட் மோரிஸ் Naked ape (நிர்வாணக்குரங்கு) என்று குறிப்பிடுவார். பரிணாமத்தில் முடி உதிர்ந்ததன் காரணம் அடர்ந்த வனத்திலிருந்து சவானா (பரந்த புல்வெளியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மரங்கள் இருந்தால் அது சவானா காடுகள் எனப்பொருள் கொள்க) காடுகளுக்கு புலம் பெயர்ந்தது என்ற தியெரி ஒன்று உண்டு. முடி உதிர்ந்ததின் காரணமாக பகலில் வேட்டையாடும் போது உடல் அதிக வெப்பமடைவது தவிர்க்கப்படுகிறது. முடிகள் அதிகமாக இருக்கும் போது வெப்பம் நீடித்து இருக்கும். அதனால் காலப்போக்கில் உடம்பு முழுக்க ரோம்ம் தேவையற்ற ஒன்றாகிப்போனது. குரங்குகள் வேட்டையாடி பார்த்திருக்கிறீர்களா என்ன? ஏன் ஆண்களுக்கு விரை விதை தொங்கியிருக்கிறது, பிடரி மயிர், அக்குள் முடி, இனப்பெருக்க உறுப்பிற்கான முடி என்று உடல் வெப்பம் குறித்த பரிணாமம் எங்கெங்கோ கொண்டு செல்லும் என்பதால் தலைப்பிற்கு வந்துவிடுகினேன். குரங்குகளுக்கு funny bone இருக்குமா? என்ற சந்தேகம் வலுத்தது. மனித பரிணாமத்தில் கட்டைவிரல் மற்ற விரல்களுக்கு எதிராக அமைந்த பண்பு பற்றுதலுக்கு முக்கியமான அவயமாக கருதப்படுகிறது. இந்த மாற்றங்கள் தான் ulnar நரம்புகளை மாற்றியிருக்கக்கூடும்
யானை எந்த விலங்கைக்கண்டு பயப்படும்? கேலிச்சித்திரங்களில் குறிப்பிடுவது போலவோ அல்லது கார்ட்டூன் தொடர்களில் குறிப்பிடுவது போலவோ யானைகள் எலிகளுக்குப்பயப்படுவதில்லை. மாறாக தேனீக்களுக்குப்பயப்படும். காரணம் தேனீக்கள் யானைகளின் கண்களுக்கு அருகே கொட்டிவிடும், சமயங்களில் தும்பிக்கைக்குள்ளும் கொட்டிவிடும். இதனால் யானைகளுக்கு தேனீக்களின் மீது பயம். ஆப்ரிக்க விவசாய நிலங்களில் பயிர்களை யானைகளிடமிருந்து காக்க தேன் கூடுகளை அமைத்திருப்பார்கள். அதுமட்டுமல்ல தேனீக்கள் குறித்து விசேஷ ஒலியின் மூலம் குறைந்தது பத்து யானைக்கூட்டங்களுக்கு பாதிக்கப்பட்ட யானைகள் செய்தியைப்பரப்பி எச்சரிக்கை செய்யும். அந்த ஒலிக்கு bee rumble என்று பெயர். இது பிரத்யேகமான ஒலி! எறும்புகளுக்கு பயப்படும் என்றாலும் தேனீக்கள் அளவிற்கு பயப்படுவதில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.. அதனாலயே எறும்புகள் இருக்கும் தாவரங்களை தவிர்த்துவிடுமாம்.
உடல் பருமனாக இருப்பது நாய்களை ஆக்ரோஷப்படுத்துகின்றனவா? பிரிட்டனில் மேற்கொண்ட ஆய்வுகளின்படி (இங்கே இது போன்ற ஆய்வுகள் குறைவு தானே) பிரிட்டனில் மட்டும் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களின் எண்ணிக்கை 55 லட்சம். இத்தனை நாய்களில் பெரும்பாலான நாய்களுக்கு தனது எஜமானர்கள் துரித உணவைக்கொடுக்கிறார்களாம். இதனால் அவைகள் தெரு நாய்களை விட பருமனாக உள்ளது! அதன் காரணமாக அவை ஆக்ரோசமாக செயல்படுகிறது என்கிறார்கள். இதன் விளைவாக குறைந்த்து ஐந்து லட்சம் மனிதர்கள் இம்மாதிரியான நாய்களால் தாக்கப்படுகிறார்களாம்! அதே போல பிற வளர்ப்புப்பிராணிகளும் தாக்குதலுக்குள்ளாகின்றனவாம். போஷாக்கற்ற உணவு, எப்போதுமே கட்டப்பட்டிருப்பதால் உடற்பயிற்சிக்கு வாய்ப்பில்லாமல் போவது, தனித்தே இருப்பதால் சமூக வாழ்க்கைக்கு பழக்கமில்லாத்து இவையே வளர்ப்பு நாய்கள் ஆக்ரோஷமாய் இருப்பதன் காரணம்! வாரம் ஒன்றிற்கு குறைந்த்து 2,50,000 பேர் இவைகளால் கடிபடுகிறார்களாம். இது தவிர 30,000 பேர் தன்னால் வளர்க்கப்படும் நாய்களால் கடிபடுகிறார்களாம். வினையைப்பார்த்தீங்களா? நாய்களின் மூலம் பரவும் ராபீஸ் வைரசுகளின் தாக்கத்திற்கான அறிகுறிகள் தெரிந்தபின் காப்பாற